Breaking

Thursday, July 2, 2020

July 02, 2020

Hutch cliQ தற்போது 4G இல்


இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமான cliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம்.
072 சந்தாதாரர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் Cliq 3G ஐ பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு Etisalat Sri Lanka நிறுவனத்தை Hutchகையகப்படுத்தி பின்னர் நாடு முழுவதும் 4G வலையமைப்பை ஸ்தாபித்தமையை தொடர்ந்து, புதிய Cliq app தற்போது 078 மற்றும் 072 இரண்டு சந்தாதாரர்களுக்கும் Cliq 4G ஐ வழங்கும் பொருட்டு Hutch இனால் வழி செய்யப்பட்டுள்ளது.
cliQஎன்பது மொபைல் அப்ளிகேஷனாகும். இதன் மூலம் பயனர்கள்  கால அடிப்படையிலான இணைய பெக்கேஜ்களை வசதியாக கொள்வனவு செய்ய முடிவதுடன், அவர்களின் ஸ்மார்ட்போன்களில் எல்லையற்ற இணைய அனுபவத்தை பெற்று மகிழலாம்.
இது மெகாபைட் மற்றும் ஜிகாபைட் என்ற டேட்டா முறைகளை தவிர்த்து,  கால அடிப்படையிலான தொகுதிகளாக இணைய அணுகலை வழங்குகின்றது. எனவே, பாவனையாளர்கள் மன அமைதியுடன், மீதமுள்ள டேட்டா மீதி தொடர்பில் எவ்வித கவலையுமின்றி இணைய பாவனையில் ஈடுபடமுடியும்.
இந்த அப்ளிகேஷன் Google Playstore, iOS ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு App Store இலும், Huawei  பாவனையாளர்களுக்கு AppGalleryஇலும் கிடைக்கின்றது.
முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இருசாராருக்குமான, 30 நிமிடங்கள் முதல் 30 நாட்கள் வரையான 3ஜி மற்றும் 4G  cliQதிட்டங்களை உங்கள் விருப்பதுக்கு ஏற்ப கொள்வனவு செய்வதன் மூலம் தமது 3G அல்லது 4G சாதனங்கள் மூலம் வசதியாக, எல்லைகளின்றி இணையத்தில் உலாவர cliQ வழி செய்கின்றது.
"cliQஐ புதிய 4Gக்கு செயற்படுத்தியதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக, மேலும் அணுகலுடன் மற்றும் வசதியான மொபைல் தரவு இணைப்பை  வழங்கும் எங்கள் வாக்குறுதியை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது," என பெறுமதி சேர் சேவைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் உதவிப் பொது முகாமையாளரான யாதவ் மதியாபரணம் குறிப்பிட்டார்.

Thursday, May 28, 2020

May 28, 2020

ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் ராக்கெட்டுக்கு என்ன ஆனது???

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் நாசாவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது.






 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதல் சுற்றுவட்ட பயணமாக இது இருந்து இருக்கும்.

டக்ளஸ் ஹர்லி  மற்றும் ரொபர்ட் பென்ஹென் ஆகிய இரு நாசா விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று (27.05.2020)  சரியாக 4.33 பி.ப EDT, மணிக்கு புறப்பட ஆயத்தமாக இருந்தனர்.


அனால் ராக்கெட் புறப்பட இருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை அனுப்ப இருந்தது. இத்திட்டம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கண்டுபிடிப்பாளர் மற்றும் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் ஆவார். இவரது நிறுவனமே உலகிலேயே இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ஆகும்.


இவ்விண்கலம் எதிர்வரும் சனிக்கிழமை ஏவப்படுவதற்கான அடுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Saturday, May 2, 2020

May 02, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 33 நாடுகள்


உலகளவில் 33 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும்  33 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.
ஏப்.20  2020 நிலவரப்படி  ஐ.நா அங்கீகரித்துள்ள 247 நாடுகளில் 214 நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. அதில் 190 பேர் உள்ளூரில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 214 நாடுகளில் குறைந்தபட்சம் 166 நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்துள்ளன. வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு குறித்த தகவல் இல்லை. கொரோனா தொடர்பான தகவல்களை வடகொரியா இரகசியமாக வைத்திருக்கலாமென கருதப்படுகிறது.இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள்  பிரதேசங்கள் குறித்து பார்ப்போம்.
1. ஐரோப்பா: ஓலண்ட் தீவுகள்  ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயன் தீவுகள்
2. லத்தீன் அமெரிக்கா: போவெட் தீவு,  தெற்கு ஜோர்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்
3. ஆசியா: வடகொரியா,  தஜிகிஸ்தான்,  துர்க்மெனிஸ்தான்
4. ஆபிரிகா: பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி  கொமொரோஸ்  பிரெஞ்சு தெற்கு பிரதேசங்கள்   லெசோதோ  செயிண்ட் ஹெலினா
5. ஓசியானியா (பசுபிக் கடல்):  அமெரிக்கன் சமோவா  கிறிஸ்மஸ் தீவு  கோகோஸ் (கீலிங்) தீவுகள்  குக் தீவுகள் ஹார்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள்  கிரிபாடி  மார்ஷல் தீவுகள்  மைக்ரோனேஷியா (கூட்டாட்சி நாடுகள்) நெளரு  நியு  நோர்போக் தீவு,  பலாவ்  பிட்காயிர்ன்  சமோவா  சாலமன் தீவுகள்  டோக்கலாவ்  டோங்கா  துவாலு  யுனைடெட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லைடிங் தீவுகள் வானுட்டு  வாலிஸ் மற்றும் புட்டுனா தீவுகள்.
இது தவிர  கொரோனா பாதிப்பு பதிவான நிலையில்  எந்தவொரு உயிரிழப்பும் இல்லாமல் அங்குவிலா  கிரீன்லேண்ட்  செயிண்ட் பர்தலோமி  செயிண்ட் லூசியா  எமன் உள்ளிட்ட 5 நாடுகளில் அனைவரும் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு பரவி வரும் நிலையில்  தொலை தூரத்தில் அமைந்திருப்பதால் தீவுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. சில நாடுகள் உடனடியாக தங்கள் நாட்டு எல்லையை உடனடியாக மூடியதுடன்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பியுள்ளன.

Wednesday, April 22, 2020

April 22, 2020

கொரோனா தளர்வும் பொது மக்களின் பொறுப்பும்


கொவிட்-19 வைரஸ் காரணமாக தற்பொழுது நாட்டின் பொருளாதாரம், நாடெங்கிலும் ஊரடங்கு, மக்களின் அன்றாட வாழக்கை நிலை பாதிப்புஇவிவாசயத்துறையின் வீழ்ச்சி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாரிய திருப்புமுனை, ஆன்மிக செயற்பாடுகள் மற்றும் புதுவருடகொண்டாட்டங்கள் என முக்கிய காரணிகளை முடக்கியது என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. இவை எமது  நாட்டுக்கு மட்டுமல்ல உலக நாடுகளில் 95 வீதமான நாடுகளுக்கு இதே கதிதான் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர நாடு தற்பொழுது சில உபாய மார்க்கங்களை கடைப்பிடித்து வருவதோடு கொரொனா பிடியிலிருந்து நாட்டை மீட்க பல்வேறு மட்டங்களில் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம் முயற்சிக்கு நம் நாடு மற்றும் நம் நாட்டின் மக்கள் என்ற கோணத்தில் பல தலையாய கடமைகளை செய்தே ஆக வேண்டும் என்ற கடப்பாட்டில் உள்ளோம்.
தற்பொழுது நாட்டில் நடைமுறையில் உள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவானது தளர்த்தப்பட்டு மீண்டும் சாதாரண மக்கள் அன்றாட வாழ்கை முறையை நடத்துவதற்கு முன்பு பூரண சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான அறிவுப்பூர்வமான விடயங்களை தெரிந்துக் கொள்வது அவசியமாகும் என புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர். எமது நாட்டில் கொரோனாவின் நிகழ்கால சூழ்நிலையை அவதானிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. காரணம் தொற்று பரவல் முடிந்தளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். காரணம் எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முழுமையான தலைமைத்துவத்தின் கீழ செயற்படும் சுகாதார துறையினர், முப்படையினர், காவல் துறையினர் மற்றும் ஏனைய சேவையாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளே ஆகும்.
ஏனைய மிகப் பெரிய நாடுகள் எம் நாட்டை விட அபிவிருத்தியடைந்த நாடுகள் உலக வல்லரசு நாடுகள் இந் நோய்தொற்றை பரப்புவதை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ள நிலையில் எமது நாடு வெற்றி கண்டுள்ளமை பெருமையடைய வேண்டிய தொன்றாகும்.
இருப்பினும் தேசிய மட்டத்தில் இந்நோய் தொற்றானது குறைந்தளவு காணப்பட்ட போதும் சர்வதேச மட்டத்தில் இதன் தாக்கம் இன்றுவரை குறைவடைவதில் பாரிய பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு பல காரணங்களை முன்வைக்கலாம்.ஆகையினால் நாமும் மிக பாதுகாப்புடனும் அவதானத்துடனும் செயற்படுவது மிக முக்கியமானதாகும்.
கொவிட்-19 என்ற வைரஸ் தற்பொழுது நாட்டின் சுகாதார துறைக்கு பாரதூரமான சவாலை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு, ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாத நிலை உண்டாகியுள்ளது இதற்கு முடிந்தளவு முயற்சிகளை சுகாதார துறையினர் மேற்கொண்டே ஆக வேண்டும். அப்போது தான் இதனூடாக சமூக பொருளாதார கல்வி சமய கலாசார போன்ற செயற்பாடுகள் மீண்டும் விருத்தி நிலையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் ஊரடங்கை தளர்த்துவது போன்றே அதன் பிறகு ஏற்பட போகும் எல்லாவித நிலைமைகளுக்கும் திட்டங்கள் மேல் மட்டத்தில் சிறப்பாக வகுக்கப்பட வேண்டும். அதனை முறையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதலில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நோய்தொற்று அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வைரஸ் ஏனைய வைரஸ் போன்று இல்லாது முழுமையாக வேறுப்பட்ட உருவமைப்பை கொண்டும் மிக எளிதாக பரவக்கூடியதாகவும் உள்ளது. அதாவது மூக்கு, வாய், கண்கள் வழியாக சுவாசப்பைக்கு சென்று முச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இது சவாசிப்பதற்கு சிக்கலை ஏற்படுத்தும் பொழுது மரணம் நிகழ்கின்றது. அவ்வாறே இந்த வைரஸ் தொற்றியுள்ளது என்பது வெளிவர, அறிகுறிகள் தென்பட காலம் செல்கிறது. அப்போது இது உக்கிரமடைந்து விடுகின்றது. ஆகவே மக்கள் இந்நோய் தொற்று தொடர்பாக மேலும் விழிப்புணர்வுடன் இருத்தல் மிக முக்கியமானதாகும்.அத்தோடு சளி, இருமல், தொண்டை நோவு, கடுமையான காய்ச்சல் போன்ற அடிமட்ட நோய் அறிகுறிகளில் கவனமெடுப்பது முக்கியமானதாகும்.
சுகாதாரதுறையினர் சமூக மட்டத்தின் அடிப்படையில் பல்வேறு நோய் அறிகுறிகள் தொடர்பாக ஆலோசனைகள் விழிப்புணர்வுகளை கிராம மக்களுக்கு ஏற்படுத்துவது மிக முக்கியமானதொரு விடயமாகும். அவ்வாறு பல அடிமட்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தாத போது பெரும் பாதிப்புக்கள் நேரிட வாய்புக்கள் அதிகம்  உண்டு. இவ்வாறு செய்வதன் ஊடாக நோய்த்தொற்று மற்றும் மரண வீதத்தையும் எம்மால் குறைத்துக் கொள்ள முடியும். எமது நாடு மேலைத்தேய நாடுகள் போலல்ல.எமது நாடு காலநிலையில் மற்றுமின்றி சூலழியற் தொடர்பிலும் சனத்தொகை அளவிலும் பாரிய மாற்றம் கொண்டது. ஆகவே, நோய் தொற்று பரவுதலை தடுக்க ஏனைய நாடுகளின் முறையை விட சற்று வித்தியாசமான முறையில் சிந்திப்பது சாலச்சிறந்தது.

அதேபோல, எமது நாட்டில் கொவிட்-19 பரவுதலை தடுப்பதற்கு முப்படை, பொலிஸாரின் அளப்பரிய சேவை பாராட்டத்தக்கது. தங்களது குடும்பத்தையும் பாராது இரவு பகலாக பாடுபட்டு கண்ணுக்கு புலனாகாத எதிரியின் தாக்குதலில் இருந்து மக்களை காத்து வருகின்றார்கள். அவ்வாறே எமது நாட்டின் சுகாதார துறையினரும். இவர்களின் சேவை அளவிட முடியாத ஒன்றாகும். அதேநேரம் எமது நாட்டின் சுகாதார துறையானது பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு காணப்படுவதோடு அதனின் செயற்பாடுகளை இலகுவாக செய்ய முடிகின்றது. இதுவும் கொரோனா தொற்றை அழிக்க சிறந்த உத்தியாக இருந்துள்ளது. மேலும் எமது நாடு தீவாக இருப்பதனால் தனித்து ஒரு தீர்மானம் எடுக்கவும் அதனை நடைமுறைப்டுத்தவும் முடியுமாக உள்ளது. அதேநேரம் ஏனைய வருகைத் தொற்றானது மிக அறுதியாகவே உள்ளது. கொரோனா தொற்றானது அதிகளவு ஆண்களையே பாதித்துள்ளதாக தகவல்கள் உள்ளன.இதற்கு காரணம் பல உள்ளது. ஒன்று புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றன முக்கிய காரணிகளாகும். ஆகவே இத்தனை நாட்கள் நாடு கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விடுப்பட ஆரம்பித்துள்ளது. நாட்டை முழுமையாக விடுவித்து மக்களின் அன்றாட செயற்பாடுகளை அளவாக முன்னெடுக்க வாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது.
இருப்பினும் மக்கள் இந்த ஊரடங்கு தளர்வினை மிக்க அவதானத்துடனும் பொறுப்புடனும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் அரசாங்கத்தின் முயற்சிக்கும் சுகாதாரத்துறையினரின் அளப்பரிய சேவைக்கும் முப்படையினருக்கும் பொதுமக்களாகிய நாங்கள் கட்டாயம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எங்களது தலையாய கடமையாகும்.மேலும் கொரோனா பிரச்சினையை முற்றாக ஒழித்துவிட்டோம் என சுகாதாரா துறையினர் குறிப்பிடும் வரை தம்முடையதும் தமது பிள்ளைகளினதும் தேசத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொது மக்கள் உதவ வேண்டும். அத்தோடு முகக் கவசம், சமூக இடைவெளி, சுகாதார நற்பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதோடு அலட்சியம் செய்யாமல் தங்களது அன்றாட தேவைகளை இடையூறு இன்றி செய்து கொள்வது முக்கியமானதாகும். அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று கொவிட் 19 என்ற வைரஸ் இன்னும் முற்றாக ஒழியவில்லை என்பதை. ஆகவே காலை 5 மணிமுதல் தொடரும் இந்த ஊரடங்கு தளர்வு இரவு 8 மணி வரை செயற்படவுள்ளது.சட்டத்திற்கு அடிபணிவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

April 22, 2020

பட்டதாரி பயிலுனர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை விரைவில் வழங்க தீர்மானம்


இவ்வரசாங்கம் வழங்கிய பட்டதாரி பயிலுனர் நியமனம் பெற்றவர்களுக்கான 20,000 கொடுப்பவை விரைவில் வழங்கி முடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று, ஜனாதிபதி இன் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியினால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


நியமனக் கடிதம் பெற்று பிரதேச செயலகங்களில் தம்மைப் பதிவு செய்த அனைவருக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Tuesday, April 21, 2020

April 21, 2020

தொழில்நுட்பப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல்கலைக்கழக கற்கை நெறிகள்..


தொழில்நுட்பப்பிரிவூ மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல்கலைக்கழக கற்கை நெறிகள்..

(2019 – 2020 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கைந்நூலினை அடிப்படையாகக் கொண்டது)

பொறியியல் தொழில்நுட்ப பிரிவூ மாணவர்கள்


1)      Engineering Technology Stream  - (1052)
§      University of Sri Jayewardenepura
§      University of Kelaniya
§      University of Jaffna
§      University of Ruhuna
§      Rajarata University
§      Uva Wellasa University
§      Wayamba University
§      University of Colombo
§      Sabaragamuwa University


விண்ணப்பிக்கக் கூடிய ஏனைய கற்கை நெறிகள்….
2)      Management Studies (TV)
3)      Information Technology (IT)
4)      Peace and Conflict Resolution
5)      Information and Communication Technology (ICT)
6)      Sports Sciences & Management
7)      Physical Education
8)      Fashion Design & Product Development
9)      Design
10)   Computation & Management
11)  Entrepreneurship & Management
12)   Industrial Information Technology
13)  Management and Information Technology (SEUSL)
14)  Hospitality, Tourism and Events Management
15)  Information Technology & Management
16)  Translation Studies
17)  Film & Television Studies
18)  Project Management
19)   Teaching English as a Second Language (TESL)
20)  Human Resource Development


உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவூ

1)   Bio Systems Technology – (945)
§      University of Sri Jayewardenepura
§      University of Jaffna
§      Eastern University
§      Rajarata University
§      South Eastern University
§      Uva Wellasa University
§      Wayamba University
§      University of Colombo
§      Sabaragamuwa University
§      University of Ruhuna





விண்ணப்பிக்கக் கூடிய ஏனைய கற்கை நெறிகள்….

1)      Management Studies (TV)
2)      Information Technology (IT)
3)      Peace and Conflict Resolution
4)      Information and Communication Technology (ICT)
5)      Sports Sciences & Management
6)      Physical Education
7)      Fashion Design & Product Development
8)      Design
9)       Computation & Management
10)   Entrepreneurship & Management
11)   Industrial Information Technology
12)   Management and Information Technology (SEUSL)
13)  Hospitality, Tourism and Events Management
14)  Information Technology & Management
15)  Translation Studies
16)  Film & Television Studies
17)  Project Management
18)   Teaching English as a Second Language (TESL)
19)  Human Resource Development
Information Communication Technology   -- (785)
[At least ‘S’ For ICT, SFT & ET or BST]
§      University of Sri Jayewardenepura
§      University of Kelaniya
§      University of Ruhuna
§      Rajarata University
§      South Eastern University
§      Vavuniya Campus
§      University of Colombo
§      Uva Wellasa University