Breaking

Showing posts with label vacancy. Show all posts
Showing posts with label vacancy. Show all posts

Wednesday, April 22, 2020

April 22, 2020

பட்டதாரி பயிலுனர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை விரைவில் வழங்க தீர்மானம்


இவ்வரசாங்கம் வழங்கிய பட்டதாரி பயிலுனர் நியமனம் பெற்றவர்களுக்கான 20,000 கொடுப்பவை விரைவில் வழங்கி முடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று, ஜனாதிபதி இன் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியினால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


நியமனக் கடிதம் பெற்று பிரதேச செயலகங்களில் தம்மைப் பதிவு செய்த அனைவருக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Monday, July 8, 2019

July 08, 2019

புதிய ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சைகள்


அரச சேவையில் புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்காக பல போட்டிப் பரீட்கைள் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிக்கையில் தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக கூறினார்.
இதற்காக 6,500 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 28ம் திகதி நடைபெறும்.
இதேவேளை, அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கும் பரீட்சைத் திணைக்களம் தற்போது தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். (GID)

Friday, July 5, 2019

July 05, 2019

Important Notices on Today's Gazette 05.07.2019


  • பதிவாளர் நாயகம் திணைக்களம்
    • முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவி 
      • குருநாகல் மாவட்டம்
  • பதிவாளர் நாயகம் திணைக்களம்
    • பிறப்புஇ இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி 
      • குருநாகல் மாவட்டம
  • பதிவாளர் நாயகம் திணைக்களம்
    • பிறப்புஇ இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி 
      • பொலநறுவை மாவட்டம்
  • பதிவாளர் நாயகம் திணைக்களம்
    • பிறப்புஇ இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் (கண்டியஃ பொது) பதிவாளர் பதவி 
      • புத்தளம் மாவட்டம்
  • பதிவாளர் நாயகத் திணைக்களம்
    • முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவி - அநுராதபுரம் மாவட்டம
  • ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவஷுட்டல் அமைச்சு - சமூக சேவைகள் திணைக்களம்
    • பணி முகாமையாளர் (ஒப்பந்தம்)ஃ பயிலுநர் மொழிபெயர்ப்பாளர் (ஒப்பந்தம்)
  • வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
    • வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் உள்நாட்டு நியமன அடிப்படையில் தனிப்பட்ட உதவியாளர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018ஃ2019

Wednesday, March 6, 2019

March 06, 2019

திறந்த போட்டிப் பரீட்சை - 2019 : நீதிமன்ற எழுதுநர் தரம் III (Court Clerk Grade III) | நீதிச் சேவை ஆணைக்குழு

பின்வரும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைக்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2019)

Open Competitive Examination for the recruitment of officers to Grade III of Court Clerk of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officer’s Service - 2018 (2019)

இப்பதவி நிரந்தரமானது. ஓய்வூதியத்திற்குரியது. பகிரங்க சேவைக்குரிய உத்தியோகத்தர்களின் பதவிகள் ஓய்வூதியத்துடனானவை என மேலே குறிப்பிடப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் ஆட்சேர்த்துக் கொள்ளப்படும் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு நியமனம் பெறும் உத்தியோகத்தர்களுக்குரிய ஓய்வூதிய முறைமையானது அரசாங்கத்தினால் மற்றும் / அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களால் நிர்ணயிக்கப்படும்.

சம்பள அளவு: 47,990/-

மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக தயாரிக்கப்படாத விண்ணப்பப்படிவங்கள் மற்றும் முழுமையான தகவல்களைக் கொண்டிராத விண்ணப்பப்படிவங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும். (விண்ணப்பப்படிவத்தின் நிழற்பிரதியொன்றினை உங்கள் வசம் வைத்துக் கொள்ளவும்.) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பரீட்சை அறிவித்தலில் உள்ள விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக சகல தகவல்களையும் உள்ளடக்கி சரியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதனையும் உரிய பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட்டு, அதன் விபரங்கள் விண்ணப்பப்படிவத்தில் உள்ளடக்கப்பட்டு பற்றுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ளதா என்பதனையும் விண்ணப்பதாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அவ்வாறில்லை எனின் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பப்படிவங்கள் விண்ணப்பதாரி பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மொழி மூலமே தயாரிக்கப்படல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஏப்ரல் 01

முழு விபரம்:








Source - அரச வர்த்தமானி (2019/03/01)

Monday, March 4, 2019

March 04, 2019

நான்கு கட்டங்களாக 5,000 ஆசிரியர்கள் விரைவில் இணைப்பு


நான்கு கட்டங்களாக 5,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தென் மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் போட்டிப்பரீட்சையினூடாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை நான்கு கட்டங்களாக சேவையில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வை. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2020 டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நான்கு கட்டங்களாக பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இணைத்துக்கொள்ளும் முறை குறித்து பத்திரிகை விளம்பரங்களினூடாக தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையை விடவும் ஏதாவதொரு பிரதேசசெயலகத்தில் வெற்றிடங்கள் அதிகமாயிருப்பின் நேர்முகத்தேர்வினூடாக ஆட்சேர்ப்பு நடத்தப்படும். அதேபோல் 10 வெற்றிடங்கள் உள்ள பிரதேச செயலகப்பிரிவில் 11 பேர் விண்ணப்பித்திருப்பின் போட்டிப்பரீட்சை நடாத்தப்படும். அனைத்து விடயங்களுக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறும். வணிகக்கல்வி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது மிகவும் அவசியம். எனினும் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றமையினால் அவ்விடயத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்த இயலாது. பொருளாதார ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதிலும் இதே பிரச்சினை நிலவுகிறது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sunday, March 3, 2019

March 03, 2019

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சை தினம் அறிவிப்பு




பட்டதாரிகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சைத் தினங்களே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளையு் மட்டும் ஒரு வருட ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளையும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இப்போட்டிப்பரீட்சை நடாத்த்படுகிறது
சப்ரகமுவ மாகாணத்திற்கான போட்டிப்பரீட்சை இம்மாதம் 31ம் திகதி கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட பரீட்சை நிலையங்களிலும் ஊவா மாகாணத்திற்கான பரீட்சைகள் அதே தினம் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட பரீட்சை நிலையங்களிலும் நடாத்தப்படவுள்ளன.

Friday, March 1, 2019

March 01, 2019

வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கும் திட்டம் அரசிடம் உண்டா?


நாட்டில் உள்ள 57000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பில் முறையான வேலைத்திட்டமோ, தீர்வுத்திட்டமோ அரசாங்கத்திடம் காணப்படவில்லை என்று அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 7000 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர். எனினும் க.பொ.த உயர்தர பரீட்சையில் மாத்திரம் சித்தியடைந்த 1000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்துள்ள 1281 பட்டதாரிகளை இவ்வெற்றிடங்களுக்கு நியமிக்கவேண்டும் என்று நாம் கோருகிறோம். அத்துடன் மத்திய அரச கூட்டுத்தாபனங்களிலும் திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் நிலவுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்திற்கு ஆட்சேர்ப்புக்காக ஏற்கனவே நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் உள்ளீர்க்கப்படவேண்டும் என்றும் அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர் வேலைக்கு பட்டதாரிகளை இணைக்கும் வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 55,60 வயது கடந்தவர்களை மீண்டும் சேவையில் இணைக்கும் முயற்சியையும் அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Thursday, February 28, 2019

February 28, 2019

இன்றைய வர்த்தமானி (2019.03.01)


  • பதிவாளர் நாயகம் திணைக்களம் 
    • பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் மேலதிக விவாகப் பதிவாளர் பதவி கம்பஹா மாவட்டம் 
  • பதிவாளர் நாயகம் திணைக்களம் 
    • பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் மேலதிக விவாகப் பதிவாளர் பதவிமாத்தறை மாவட்டம் 
  • தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்  
    • விளையாட்டு டிப்ளோமா பாடநெறி 
  • இலங்கை தொழில்நுட்ப சேவையின் முதலாம் தரத்தின்அலுவலர்களுக்கான மூன்றாவது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை
  • நீதிச்சேவை ஆணைக்குழு 
    • அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையில் நீதிமன்ற முகாமைத்துவ உதவி சேவைக்குரிய நீதிமன்ற எழுதுனர் எழுதினர் தரம் 3 க்கு ஆட்சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 
  • ஆயுர்வேத மருத்துவ சேவையின் வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை
Click Below for the Gazette
February 28, 2019

நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019)



அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான  திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019)

1. அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்தப் போட்டிப்பரீட்சைக்கு தகைமையூடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 இப்பரீட்சையானது 2019 யூன் மாதம் கீழே அட்டவணை 01இல் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் அமைக்கப்படும் பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படும். நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாக இப்பரீட்சையினை ஒத்தி வைப்பதற்கான அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கான அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு உள்ளது.


தகைமைகள். 

அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க அலுவலர்; சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச்சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கான பதவிக்கு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு விண்ணப்பதாரிகள் கீழ்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

(அ)  இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.

(ஆ)  விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் இறுதித்திகதிக்கு 18 வயதிற்கு குறையாமலும் 32 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்@
 (அதற்கமைவாக 01.03.2001 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் மற்றும் 01.03.1987 ஆந் திகதி அல்லது அதற்கு பின்னா; பிறந்தவர்களுக்கு மாத்திரம் விண்ணப்பிக்க தகைமை உள்ளது.)

(இ)  நன்நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்

(ஈ)  அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்படும் சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும் சிறந்த உடல், உள ஆரோக்கியம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

(உ)  கீழ்வரும் கல்வித்தகைமைகளை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். 

(I)  சிங்களம் அல்லது தமிழ் மொழி மற்றும் கணிதம் உட்பட நான்கு (04) பாடங்களுக்கு திறமை சித்திகளுடன் ஒரே தடவையில் ஆங்கிலம் உட்பட ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் 

(II)  கல்விப் பொதுத்தராதரப்பத்திர (உயர் தரப்) பரீட்சையின் சகல பாடங்களிலும் (பொது அறிவூப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்து ) ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல் (பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே தடவையில் மூன்று (03) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் போதுமானதாகும்.)

கவனிக்க. – சகல விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய தகைமைகளை வர்த்தமானப் பத்திரிகையின் திகதியாகிய 2019 மார்ச்சு  மாதம் 01 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.



February 28, 2019

விண்ணப்பம் கோரல் ! முன்பள்ளி ஆரம்ப கல்வி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி

முன்பள்ளி ஆரம்ப கல்வி ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கான விண்ணப்பங்கோரப்பட்டுள்ளது விபரங்கள் கீளே 


Sunday, February 24, 2019

February 24, 2019

Lanka Electricity Company - Job Opportunities

 
Lanka Electricity Company (Private) Limited
Vacancy For the Post of Technical Officer Grade II

Lanka Electricty Company (Private) Limited, a distribution utility in Sri Lanka which has seven branches covering operational areas of the coastal belt of the island from Negombo to Galle serving over 500,000 consumers and has a workforce of 1500 employees is seeking qualified personnel for the post of Technical Officer Grade II



Please forward your Bio-Data, copies of certificates together with names and contact details of two non-related referees to reach the undersigned on or before 07 march 2019.

The post applied for should be clearly stated on the top-left hand corner of the envelope.

Head of Human Resources and Administration
Lanka Electricity Company (Private) Limited
3rd Floor, E.H. Cooray Building,

411, Galle Road, Colombo 03.