Breaking

Thursday, February 28, 2019

மகளிரை ஊக்குவிப்பதற்கு பல பயிற்சி கற்கை நெறிகள்


மகளிரை ஊக்குவிப்பதற்காக பல பயிற்சி திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை மகளிர் பணியகம் டேவிட் பிரீஸ் மோட்டார் வாகன நிறுவனம் மற்றும் தேசிய பயிற்சி நிறுவனங்களின் அமைப்புக்களுடன் இணைந்து இந்த பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் டேவிட் பிரீஸ் மோட்டார் வாகன நிறுவனம் மற்றும் தேசிய பயிற்சி நிறுவனங்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டிகளை திருத்துதல் உள்ளிட்ட ஆறு மாத கால பயிற்சி கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் செயலனியின் பணிப்பாளர் திருமதி.ஜம்பா உபசேன தெரிவித்தார். இந்த பயிற்சியின் கீழ் முச்சக்கர வணிடிகளை திருத்துதல் உதிரி பாகங்கள் தொடர்பான பயிற்சிகளும் சுய தொழில்வாய்ப்புக்களில் மகளிரை ஈடுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கற்கை நெறிகளை பூர்த்தி செய்யும் மகளிர்க்கு NVQ சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. 

தற்பொழுது இந்த கற்கை நெறிகள் கிளிநொச்சி அநுராதபுரம் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளன. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இந்த கற்கை நெறிகள் நடைபெற்று வருகின்றன. வயதெல்லை மற்றம் கல்வி தகுதிகள் தேவையற்றதாகும். எத்தகைய வயதினரும் எத்தகைய கல்வி தரத்தை கொண்ட மகளிரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை மகளிர் பணியகத்துக்கு சமர்பிக்க வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment