நாட்டில் உள்ள 57000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பில் முறையான வேலைத்திட்டமோ, தீர்வுத்திட்டமோ அரசாங்கத்திடம் காணப்படவில்லை என்று அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 7000 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர். எனினும் க.பொ.த உயர்தர பரீட்சையில் மாத்திரம் சித்தியடைந்த 1000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்துள்ள 1281 பட்டதாரிகளை இவ்வெற்றிடங்களுக்கு நியமிக்கவேண்டும் என்று நாம் கோருகிறோம். அத்துடன் மத்திய அரச கூட்டுத்தாபனங்களிலும் திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் நிலவுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்திற்கு ஆட்சேர்ப்புக்காக ஏற்கனவே நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் உள்ளீர்க்கப்படவேண்டும் என்றும் அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர் வேலைக்கு பட்டதாரிகளை இணைக்கும் வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 55,60 வயது கடந்தவர்களை மீண்டும் சேவையில் இணைக்கும் முயற்சியையும் அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment