ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வை வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் வாசிக்கப்பட்டு வருகிறது.
இதன்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும்.
இதற்கென 40 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வரவு - செலவு திட்டமானது வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment