Breaking

Friday, March 1, 2019

பெண்கள் பாடசாலைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மாணவர்கள் கைது


கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்து பட்டாசு கொளுத்தி, அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 34 பாடசாலை மாணவர்களை தாம் இன்று கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் இந்த செயல் காரணமாக பாடசாலையில் உள்ள இரண்டு நுழைவு கதவுகள், சில வாகனங்கள் உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கல்கிஸ்சை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் உள்ள இரண்டு ஆண்கள் பாடசாலைகளின் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்களில் வந்த இந்த மாணவர்கள் பாடசாலைக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
பெண்கள் பாடசாலையின் அதிபர் செய்த முறைப்பாட்டை அடுத்து மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment