கொவிட்-19 வைரஸ் காரணமாக தற்பொழுது நாட்டின் பொருளாதாரம், நாடெங்கிலும் ஊரடங்கு, மக்களின் அன்றாட வாழக்கை நிலை பாதிப்புஇவிவாசயத்துறையின் வீழ்ச்சி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாரிய திருப்புமுனை, ஆன்மிக செயற்பாடுகள் மற்றும் புதுவருடகொண்டாட்டங்கள் என முக்கிய காரணிகளை முடக்கியது என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. இவை எமது நாட்டுக்கு மட்டுமல்ல உலக நாடுகளில் 95 வீதமான நாடுகளுக்கு இதே கதிதான் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர நாடு தற்பொழுது சில உபாய மார்க்கங்களை கடைப்பிடித்து வருவதோடு கொரொனா பிடியிலிருந்து நாட்டை மீட்க பல்வேறு மட்டங்களில் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம் முயற்சிக்கு நம் நாடு மற்றும் நம் நாட்டின் மக்கள் என்ற கோணத்தில் பல தலையாய கடமைகளை செய்தே ஆக வேண்டும் என்ற கடப்பாட்டில் உள்ளோம்.
தற்பொழுது நாட்டில் நடைமுறையில் உள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவானது தளர்த்தப்பட்டு மீண்டும் சாதாரண மக்கள் அன்றாட வாழ்கை முறையை நடத்துவதற்கு முன்பு பூரண சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான அறிவுப்பூர்வமான விடயங்களை தெரிந்துக் கொள்வது அவசியமாகும் என புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர். எமது நாட்டில் கொரோனாவின் நிகழ்கால சூழ்நிலையை அவதானிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. காரணம் தொற்று பரவல் முடிந்தளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். காரணம் எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முழுமையான தலைமைத்துவத்தின் கீழ செயற்படும் சுகாதார துறையினர், முப்படையினர், காவல் துறையினர் மற்றும் ஏனைய சேவையாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளே ஆகும்.
ஏனைய மிகப் பெரிய நாடுகள் எம் நாட்டை விட அபிவிருத்தியடைந்த நாடுகள் உலக வல்லரசு நாடுகள் இந் நோய்தொற்றை பரப்புவதை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ள நிலையில் எமது நாடு வெற்றி கண்டுள்ளமை பெருமையடைய வேண்டிய தொன்றாகும்.
இருப்பினும் தேசிய மட்டத்தில் இந்நோய் தொற்றானது குறைந்தளவு காணப்பட்ட போதும் சர்வதேச மட்டத்தில் இதன் தாக்கம் இன்றுவரை குறைவடைவதில் பாரிய பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு பல காரணங்களை முன்வைக்கலாம்.ஆகையினால் நாமும் மிக பாதுகாப்புடனும் அவதானத்துடனும் செயற்படுவது மிக முக்கியமானதாகும்.
கொவிட்-19 என்ற வைரஸ் தற்பொழுது நாட்டின் சுகாதார துறைக்கு பாரதூரமான சவாலை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு, ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாத நிலை உண்டாகியுள்ளது இதற்கு முடிந்தளவு முயற்சிகளை சுகாதார துறையினர் மேற்கொண்டே ஆக வேண்டும். அப்போது தான் இதனூடாக சமூக பொருளாதார கல்வி சமய கலாசார போன்ற செயற்பாடுகள் மீண்டும் விருத்தி நிலையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் ஊரடங்கை தளர்த்துவது போன்றே அதன் பிறகு ஏற்பட போகும் எல்லாவித நிலைமைகளுக்கும் திட்டங்கள் மேல் மட்டத்தில் சிறப்பாக வகுக்கப்பட வேண்டும். அதனை முறையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதலில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நோய்தொற்று அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வைரஸ் ஏனைய வைரஸ் போன்று இல்லாது முழுமையாக வேறுப்பட்ட உருவமைப்பை கொண்டும் மிக எளிதாக பரவக்கூடியதாகவும் உள்ளது. அதாவது மூக்கு, வாய், கண்கள் வழியாக சுவாசப்பைக்கு சென்று முச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இது சவாசிப்பதற்கு சிக்கலை ஏற்படுத்தும் பொழுது மரணம் நிகழ்கின்றது. அவ்வாறே இந்த வைரஸ் தொற்றியுள்ளது என்பது வெளிவர, அறிகுறிகள் தென்பட காலம் செல்கிறது. அப்போது இது உக்கிரமடைந்து விடுகின்றது. ஆகவே மக்கள் இந்நோய் தொற்று தொடர்பாக மேலும் விழிப்புணர்வுடன் இருத்தல் மிக முக்கியமானதாகும்.அத்தோடு சளி, இருமல், தொண்டை நோவு, கடுமையான காய்ச்சல் போன்ற அடிமட்ட நோய் அறிகுறிகளில் கவனமெடுப்பது முக்கியமானதாகும்.
சுகாதாரதுறையினர் சமூக மட்டத்தின் அடிப்படையில் பல்வேறு நோய் அறிகுறிகள் தொடர்பாக ஆலோசனைகள் விழிப்புணர்வுகளை கிராம மக்களுக்கு ஏற்படுத்துவது மிக முக்கியமானதொரு விடயமாகும். அவ்வாறு பல அடிமட்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தாத போது பெரும் பாதிப்புக்கள் நேரிட வாய்புக்கள் அதிகம் உண்டு. இவ்வாறு செய்வதன் ஊடாக நோய்த்தொற்று மற்றும் மரண வீதத்தையும் எம்மால் குறைத்துக் கொள்ள முடியும். எமது நாடு மேலைத்தேய நாடுகள் போலல்ல.எமது நாடு காலநிலையில் மற்றுமின்றி சூலழியற் தொடர்பிலும் சனத்தொகை அளவிலும் பாரிய மாற்றம் கொண்டது. ஆகவே, நோய் தொற்று பரவுதலை தடுக்க ஏனைய நாடுகளின் முறையை விட சற்று வித்தியாசமான முறையில் சிந்திப்பது சாலச்சிறந்தது.
அதேபோல, எமது நாட்டில் கொவிட்-19 பரவுதலை தடுப்பதற்கு முப்படை, பொலிஸாரின் அளப்பரிய சேவை பாராட்டத்தக்கது. தங்களது குடும்பத்தையும் பாராது இரவு பகலாக பாடுபட்டு கண்ணுக்கு புலனாகாத எதிரியின் தாக்குதலில் இருந்து மக்களை காத்து வருகின்றார்கள். அவ்வாறே எமது நாட்டின் சுகாதார துறையினரும். இவர்களின் சேவை அளவிட முடியாத ஒன்றாகும். அதேநேரம் எமது நாட்டின் சுகாதார துறையானது பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு காணப்படுவதோடு அதனின் செயற்பாடுகளை இலகுவாக செய்ய முடிகின்றது. இதுவும் கொரோனா தொற்றை அழிக்க சிறந்த உத்தியாக இருந்துள்ளது. மேலும் எமது நாடு தீவாக இருப்பதனால் தனித்து ஒரு தீர்மானம் எடுக்கவும் அதனை நடைமுறைப்டுத்தவும் முடியுமாக உள்ளது. அதேநேரம் ஏனைய வருகைத் தொற்றானது மிக அறுதியாகவே உள்ளது. கொரோனா தொற்றானது அதிகளவு ஆண்களையே பாதித்துள்ளதாக தகவல்கள் உள்ளன.இதற்கு காரணம் பல உள்ளது. ஒன்று புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றன முக்கிய காரணிகளாகும். ஆகவே இத்தனை நாட்கள் நாடு கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விடுப்பட ஆரம்பித்துள்ளது. நாட்டை முழுமையாக விடுவித்து மக்களின் அன்றாட செயற்பாடுகளை அளவாக முன்னெடுக்க வாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது.
இருப்பினும் மக்கள் இந்த ஊரடங்கு தளர்வினை மிக்க அவதானத்துடனும் பொறுப்புடனும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் அரசாங்கத்தின் முயற்சிக்கும் சுகாதாரத்துறையினரின் அளப்பரிய சேவைக்கும் முப்படையினருக்கும் பொதுமக்களாகிய நாங்கள் கட்டாயம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எங்களது தலையாய கடமையாகும்.மேலும் கொரோனா பிரச்சினையை முற்றாக ஒழித்துவிட்டோம் என சுகாதாரா துறையினர் குறிப்பிடும் வரை தம்முடையதும் தமது பிள்ளைகளினதும் தேசத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொது மக்கள் உதவ வேண்டும். அத்தோடு முகக் கவசம், சமூக இடைவெளி, சுகாதார நற்பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதோடு அலட்சியம் செய்யாமல் தங்களது அன்றாட தேவைகளை இடையூறு இன்றி செய்து கொள்வது முக்கியமானதாகும். அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று கொவிட் 19 என்ற வைரஸ் இன்னும் முற்றாக ஒழியவில்லை என்பதை. ஆகவே காலை 5 மணிமுதல் தொடரும் இந்த ஊரடங்கு தளர்வு இரவு 8 மணி வரை செயற்படவுள்ளது.சட்டத்திற்கு அடிபணிவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
No comments:
Post a Comment