பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பண வவுச்சர்களில் அரசியல்வாதிகளின் படங்களை பொறிப்பதற்கு மேலதிகமாக ஒரு ரூபா கூட செலவு செய்யவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவம்சம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் அடிப்படையற்றதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பண வவுச்சர்களை அச்சிட செலவிடப்பட்ட தொகையில் அரைவாசிக்கும் அதிகம் அரசியல்வாதிகளின் படங்களை அதில் பொறிப்பதற்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
வவுச்சர்களை சாதாரண அச்சகத்தில் அச்சிட்டு வழங்குவதில்லை. பாதுகாப்பு முறைமைகளை உள்ளடக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. அதனால்தான் விலை சற்று அதிகமாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment