Breaking

Sunday, March 3, 2019

புதிய கற்கை நெறிகளை அறிமுகப்படுத்த தேசிய கல்வி நிறுவகம் நடவடிக்கை


தொழிற்றுறைகளுக்கு ஏற்ற புதிய கற்கை நெறி கட்டமைப்பு, கல்வி நிறுவகத்தினால் பாடசாலை கற்கை நெறிகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கல்வி நிறுவகத்தின்;பணிப்பாளர் திருமதி கலாநிதி ஜயந்தி குணசேகர தெரிவித்தார்.

பல்கலைக்கழங்களுக்கான உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி அமைச்சு, ஆகியன ஒன்றிணைந்து இந்த கற்கை நெறிகள் தொடர்பில் சிறப்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு புதிய கற்கை நெறிகளுக்கான திட்டம் தயாரிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். 
வர்த்தகம், ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் ஆற்றலை மேம்படுத்துதல், நுண்கலைக்கு முக்கியத்துவம் வழங்கல், தகவல் தொழில்நுட்பம், சமூக நலன், வாழ்க்கை முறை, தொழிற்றுறை ஆற்றல், தொழில் துறைகளுக்கான மூலோபாயம், விளையாட்டு முதலானவற்றின் கீழ் உயர்தர கற்கை நெறியை மேற்கொள்வதற்கு வசதியாக இவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment