Breaking

Wednesday, February 27, 2019

பகுதி நேர ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை


தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மூலமாக நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளை வழங்கும் போதனாசிரியர்களுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பு தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான ஹாபீஸ் நஸீர் அஹமட்டுடன் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் பகுதிநேர போதானாசிரியர்களாகக் கடமையாற்றுவோர், தாம் இதுகாலவரையில் எதிர்கொண்டும்வரும் முக்கிய குறைபாடுகள் குறித்து தலைவரின் கவனத்துக்கு முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக பல வருடங்களாகப் பணி செய்தும் இது காலவரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படாமை, மருத்துவ விடுகை கூட பெற முடியாமை, கடந்த இரண்டு மாதகாலமாகச் சம்பளம் பெறமுடியாமல் இருக்கின்றமை, போதானாசிரியர்கள் தொழில்சார் பயிற்சிகளை பெற முடியாமை மற்றும் பாடசாலை கல்வியில் ஜி.சீ.ஈ. சாதாரண தரத்தில் சித்தி அடையாத மாணவர்கள் 13 வருட உத்தரவாதப்படுத்தப்படும் கல்வித் திட்டத்தின் கீழ் நைற்றா மூலமாகப் வழங்கப்பட்டும் ஆளுமை விருத்தி பயிற்சி நெறிக்களுக்கான சேர்த்துக்கொள்ளப்படுவதில் பல இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர்.
முக்கியமாக இப்பயிற்சி நெறிகளில் சேருவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும் போது 500ற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்தாலும் 20 பேருக்கே இடமளிக்கப்படுகின்றது.
அத்துடன் இடப்பிரச்சினை மற்றும் உபகரணங்கள் இல்லாமை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான நடவடிக்கைகள் உடன் எடுக்கப்படும் எனத் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment