Breaking

Thursday, January 17, 2019

தேசிய கல்வி நிறுவக பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஏப்ரலில்



தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டபின் கல்வி டிப்ளோமாவுக்கான விண்ணப்பங்கள்  எதிர்வரும் ஏப்ரல் மாதம் கோரப்படவுள்ளதாக பட்டப்பின் கல்வி டிப்ளோமா இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறியின் பிராந்திய இணைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரலில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஓகஸ்ட் மாதமளவில் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு செப்டம்பர் மாதம் பாடநெறியை ஆரம்பிப்பதற்கு தாம் உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே நேரம் தற்போதைய அணியினரின் கற்றல் கற்பித்தல் மேற்பார்வையின் இரண்டாம் கட்டம் 2019.01.21 ஆம் திகதி ஆரம்பமாகி 2019.03.29 ஆம் திகதி முடிவடைய உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

No comments:

Post a Comment