மனிதராக பிறந்த ஒவ்வொருத்தரும் கல்வி வளர்ச்சியில் பல்வேறு கால
கட்டங்களிலும் தமக்கு தேவையானதை
கற்றுக்கொண்டு வந்துள்ளார்கள். இன்றைய சமூகம் விரைவில் மாறிக்கொண்டு
வருகின்றது.கல்வியினால் வாழ்க்கை முறைகள் செயற்பாடுகள் ஆகியன குறுகிய கால
இடைவெளியில் மாறி விடுகின்றன.நாம் கற்றவற்றில் சில விடயங்கள் சில வருடங்களின்
பின்னர் எமது வாழ்க்கைக்கு பயன்படாது போகும் அளவிற்கு சமூகம் மாறிக் கொண்டு இருக்கின்றது.இதற்காக
மாறி வரும் விஞ்ஞான தொழிநுட்ப முறைகளுக்கு பொருத்தமான கல்வியை மாணவர்கள் கற்க
வேண்டி இருக்கின்றது. இதனால் கல்வி சமூக மாற்றத்துக்கு உள்ளாகிறது.
கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியலாளர்கள் கூற்றின் படி இளைய தலைமுறையினரை முறையாக வழிநடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமன்றி சமூகத்திலே மாற்றத்தினை வழிநடத்துவதிலும் பிரதான பங்கு கல்விக்கு உள்ளது.
சமூகத்துக்கான விழுமியங்களை உருவாக்குவதிலும் சமூக மூலதனங்களை ( social capital) ஒற்றுமை சகிப்புத்தன்மை ஒருவரையொருவர் சார்ந்து வாழ்தல் நட்புணர்வு ஆகியவற்றை சமூக கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் கல்வியின் பங்களிப்பு முதன்மையானது மட்டுமல்ல முக்கியமானதும் கூட. நமக்கான சமூகத்தை நேர்மையாக்குவதிலும் நல்லொழுக்கத்திலும் ஆழமான நற்சிந்தனையும் அகலமான அறிவையும் ஏற்படுத்த கல்வி மிக அவசியம் என்பதை மறுக்க முடியாது.
கற்றல் நிறைவு செய்தல் மனிதனாதல் போன்ற இலக்குகளின் அடிப்படையில் சமூகத்தின் எல்லா நிறுவனங்களையும் ஒன்றிணைத்து அனைவருக்கும் மேலதிக கல்வியை அளிக்க முயலும் ஒரு சமூகமே கல்வி கற்கும் ஒரு சமூகம் எனலாம். இச் சமூகத்தின் அடிப்படை நோக்கம் கல்வியை மனித இனம் முழுவதிற்கும் கிடைக்க செய்வதாகும். கல்வி வாழ்க்கை யிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு செயற்பாடாகவோ காலம் இடம் என்பவற்றுக்கு கட்டுப்பட்டு நடைபெறும் ஒன்றாகவோ சமூகத்திற்கு அமையக்கூடாது. இதனால் சமூகம் பெறும் கல்வியானது நாளடைவில் சமூக. மாற்றத்திற்கு வழிகோலுகின்றது.
இச் சமூக மாற்றம் ஏற்படுவதற்கு கல்வியின் இலக்குகள் சில வரையறுக்கப்பட்டுள்ளளன.
1. அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி அளித்தல் என்பதையே குறித்து நிற்கின்றது.இந்த அறிவியல் யுகத்தில் நாமும் இணைந்து கொள்ள வேண்டுமானால் அதன் சவால்களுக்கெல்லாம் ஈடுகொடுக்க வேண்டுமானால் நிச்சயமாக கல்வியறிவு பெற்றேயாக வேண்டும். ஒரு மனிதனுக்கு சுவாசம் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவிற்கு கல்வியும் அவசியமானது என்று ஏற்றுக்கொள்ளுமளவிற்கு இன்று அதன் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.எனவே தான் "எல்லோருக்கும் கல்வி "என்ற கோஸம் என்றுமில்லாதவாறு இன்று ஓங்கி ஒலிக்கப்படுகிறது.இந்த வகையில் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விசேட கல்வி விசேட தேவைகள்சார் கல்வி என்பனவும் வழங்கப்படுகின்றன.
2, விழுமிய கல்வி
கற்போரை பண்புள்ளவராக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற கல்வியே விழுமிய கல்வியாகும். இது தவிர நற்பண்புகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் மற்றவர்களுக்கு கற்பித்தல் என்று பொருள்படும்.வயதுடன் விழுமியங்கள் மாறுபடும். சான்றோரையும் சால்பு உள்ளோரையும் உருவாக்குவதற்காக இக் கல்வி பயன்படுத்தப்படுகின்றது. விழுமிய வளர்ச்சிக்கு கலைத்திட்டத்தில் பாடம் ஒதுக்குவது கடினம்.ஆசிரியர்களின் நடத்தைகள் மூலமே இவற்றை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும்.
3, கற்கும் சமூகத்தை உருவாக்குதல்
ஒரு முழுமையான மனிதனை உருவாக்க இவ் வகையான திசைகளில் இருந்தும் சக்தி செலுத்தப்படுதல் அவசியம். இவ்வாறான சக்தியை கல்வி மூலம் மட்டுமே வழங்க முடியும். தனி மனிதனை சமூக வினைத்திறன் கொண்டவனாக மாற்றுவதற்கு கல்வி அவசியம் ஆகிறது. இதனாலேயே கற்கும் சமூகத்தை உருவாக்குதல் வேண்டிய தேவை உள்ளது.

4, வாழ் நாள் நீடித்த கல்வி
கல்வி என்பது ஒருவரது வாழ்நாளில் இளமைப் பருவத்தில் ஒரு சில ஆண்டுகள் மட்டும் நிகழும் ஒன்றன்று. சமூக நிலைமைகள் மாற்றம் பெறுவது தொடர்ந்து நிகழ்வதாகும். இதன் விளைவாக புதிய சவால்களும் தேவைகளும் எழுகின்றன. தொழிநுட்ப வளர்ச்சி புதிய தொழில்களுக்கான புதிய திறன்கள் தேவைப்படுதல் இன்றைய சமூக வாழ்வில் சிக்கல் மிகுந்த பிரச்சினைகள் காணப்படல் போன்றனவும் இணைந்து கல்வி வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் ஒன்றாக அதனை மாற்றி உள்ளனர். வாழ்நாள் முழுவதும் கற்றல் தனி மனிதனுக்கும் அவன் வாழும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாகும்.

5. கல்வியை வாழ்க்கை அனுபவங்களோடு தொடர்புபடுத்துவதுடன் தானே கற்கும் ஆற்றலை வளர்த்தல்.
6.திறந்த கல்வி
கற்பதற்கு ஏற்பட்ட தடைகளை நீக்க உதவும் கல்வியே திறந்த கல்வி ஆகும். திறந்த கல்வியின் அடிப்படை பண்பாக நெகிழ்ச்சி தன்மை அதிகமாவும் கட்டுப்பாடுகள் இல்லாமலும் காணப்படும்.
7.தொலைக்கல்வி
கற்பவரும் கற்பிப்பவரும் நேருக்கு நேர் தொடர்ச்சியாக சந்திக்காவண்ணம் எழுத்துமூல இலத்திரனியல் ஆவணங்களின் உதவியுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுதலே தொலைக்கல்வி என்பதாகும்.
எந்த சமூக அமைப்பிலும் வெளிப்படும் திறமைகள் மூலம் (கல்வி அறிவு மூலம்) மாற்றம் ஏற்படும் என்பது மேற்காட்டிய இலக்குகள் மூலம் அடையப்படலாம். இம் மாற்றமானது
*ஒழுங்கமைக்கப்பட்ட முறை( பாடசாலை நிறுவனங்கள்)
*ஒழுங்கமைப்புச் சாராத முறை(சர்வோதயம் போன்ற ஸ்தாபனங்கள்)
*ஒழுங்கமைப்பு இல்லாத முறை(பரம்பரை மூலம் பெறப்படும் அறிவு)
போன்ற முறைகளின் எம்முறையிலாவது கல்வி கிடைத்தாற் போதும் ஏனெனில் அவை அனைத்தும் சமூகத்தின் கல்வி செயற்பாடுகளே இக் கல்வி சமூகத்தில் இயங்குமொன்றாக காணப்படுகின்றது.அதன் நோக்கங்களும் முறைகளும் செயற்படும் சமூகத்தின் தன்மையில் தங்கியுள்ளது. சமூகம் மாறும் தன்மையுடையதால் சமூகத்திகேற்ப கல்வியும் மாறும் தன்மையுடையது. ஆகவே சமூகத்தில் நிலவும் பாரம்பரிய நடைமுறைகளுக்கேற்ப அவை முன்னேறிச் செல்லவும் அதனை மாற்றியமைக்கவும் கல்வி அவசியமென்பதை அறிய முடிகின்றது.
கல்வி மூலம் ஒருவரது தனிப்பட்ட நடத்தை மாறுவது போலவே ஒரு சமூகத்தின் கூட்டு நடத்தையும் மாறுவதினால் தான் கல்வி சமூகத்திற்கு முக்கிய காரணியாகும். அரசாங்க பாடசாலைகளின் அடிப்படை நோக்கம் வினைத்திறன் மிக்க குடிமக்களை விருத்தியாக்குவதேயாகும்.
எனவே கல்வி சமூகத்திற்கேற்பவே தீர்மானிக்கப்படுகின்றது என்பதால் கல்வியும் சமூகமும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது எனலாம். கல்வியின் மூலம் மனித வளம் விருத்தி செய்யப்படுவதனால் அது பொருளாதாரத் துறையில் ஈடுபட்டு பொருத்தமான பயனைப்பெற்று சமூகத்தரத்தினை உயர்த்துகிறது.அதே போன்று கல்விமான்கள் மூலமே நிலையான அரசியல் கட்டியமைக்கப்பட்டு சமூக முன்னேற்றம் அடைகின்றது.
No comments:
Post a Comment