Breaking

Sunday, March 3, 2019

அரசாங்க அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் புதிய நடைமுறை


நாடாளாவிய ரீதியில் அரச சேவையில் அதிகாரிகள் முகம் கொடுக்கும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, புதிய பதவி உயர்வு முறையொன்று நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் ஒன்றிணைந்த சீர்திருத்தமாக கடந்த 26 ஆம் திகதி இந்த யோசனை அமைச்சரவைக்கு முன் வைக்கப்பட்டது.
நாடாளாவிய ரீதியில் சேவையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் சங்கங்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து அரசாங்கத்தின் பொறிமுறையில் சிறந்த பலாபலன்களை கருத்தில் கொண்டு இந்த முறை அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment