பாடசாலை கல்வியை நிறைவு செய்த 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக ஆறு மாத கால ஆங்கில பேச்சு மொழி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இதனை தெரிவித்துள்ளது. நாடாளவிய ரீதியாக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி தொடக்கம ;ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.30 தொடக்கம் 5.30 மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
விண்ணப்பங்கள் நாளை வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரிகள் 0112 844 212 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் எதிர்வரும் பத்தாம் திகதி பாடநெறி ஆரம்பமாகும் வேளையில் தமது விண்ணப்பங்களுடன் வந்து பயிற்சி நெறிகளுடன் இணைந்துகொள்ள முடியும்.
பயிற்சி நெறியின் முடிவில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் சான்றிதழ் வழங்கப்படும். தொழில் சந்தைக்கு பொருத்தமான தொழில்களை உருவாக்குவதற்கு ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்
No comments:
Post a Comment