Breaking

Saturday, March 2, 2019

வீடுகளில் அதிரடி மாற்றத்தை செய்யும் கூகுள் ஹோம்: என்ன மாற்றம் தெரியுமா?


கூகுள் நிறுவனம் ஹோம் எனும் இலத்திரனியல் சாதனத்தினை சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
இச் சாதனத்தை இணைய இணைப்புடனோ அல்லது ஸ்மார்ட் கைப்பேசிகளுடனோ இணைத்து பயன்படுத்த முடியும்.
பயனர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைச் செய்யக்கூடிய இச் சாதனத்தில் மற்றுமொரு புதிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மின்குமிழ்களின் வர்ணங்களை விரும்பியவாறு மாற்றிக்கொள்வதற்கு கூகுள் ஹோம் உதவக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஏறத்தாழ 42 வர்ணங்களில் ஸ்மார்ட் மின்குமிழ்களை ஒளிர வைக்க முடியும்.
புதிய கூகுள் ஹோமில் தரப்பட்டுள்ள இவ் வசதியினை iOS மற்றும் Android சாதனங்களினைப் பயன்படுத்தியும் செயற்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment