இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீடம் மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு டி.எம்.கே.அஸோஸியேட்ஸ் முற்றிலும் இலவசமாக ஒழுங்கு செய்துள்ள விசேட வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2019) காலை 9.00மணிக்கு சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது.
'சட்டத்துறைக்கு இளம் தலைமுறையினரை தயார் செய்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிக்கு கூடுதல் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்மொழி மூலம் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திலிருந்தும் எந்தவொரு மாணவரும் இதில் பங்குபற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் அதன் எதிர்கால தேவை, உயர்தர தொழில் வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை வழங்கும் வகையில் தேசிய ரீதியில் சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்களை கொண்டு இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. போட்டிப் பரீட்சை தொடர்பில் மிகவும் அனுபவம் மிக்க வளவாளர்களை கொண்டு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கும் இலங்கை சட்டக் கல்லூரிக்கும் கூடுதல் அனுமதிகளை பெற வைக்கும் இம்முயற்சியின் ஆரம்ப கருத்தரங்காக இது அமைந்திருக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
கல்விப்புலத்தில் சிறந்த ஆளுமைகளை உருவாக்குதல், சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சமூகமொன்றை கட்டியெழுப்புதல் மற்றும் சிறந்த இளம் தலைமைகளை தயார் செய்யும் உயரிய, நீண்ட கால நோக்கில் டி.எம்.கே அஸோஸியேட்ஸ் இம்முயற்சியினை முன்னெடுத்து வருகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment