நம் எல்லோருக்கும் பாடசாலையில் சிலரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும் அவங்க வகுப்பறையில் டொப்பர் ஆகவும் இருக்கமாட்ட்டார்கள் பார்ப்பதற்கு ஸ்மாட் ஆகவும் இருக்கமாட்டார்கள் பணக்காரர்களாகவும் கூட இருக்க மாடடார்கள் ஆனால் எல்லோருக்கும் அவர்களை நன்றாக பிடிக்கும். ஏன் இந்த மாதிரி நடக்கின்றது ஏன் என்றால் அவர்களுக்கு எல்லோரிடமும் எவ்வாறு பேசவேண்டும் என்று தெரியும் அவர்களின் பேச்சு திறமை நன்றாக இருக்கும். அனால் பலருக்கு தனது நண்பர்களையும் உறவினர்களையும் தவிர வேறு யாரையும் புதிதாக சந்தித்தால் அவர்களிடம் எப்படி பேசுவது என்று தெரியாது. எமக்கு கம்யூனிகேஷன் ஸ்கில் சிறப்பாக வளர்த்து கொள்ள வேண்டும். கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நம்முடைய கல்வி முறையில் இதை கற்று தருவதில்லை . நமது பாடசாலையில் கற்று தந்தாலும் அது அவ்வளவு உதவியாக இருப்பதில்லை
இந்த காலத்தில் அதிகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் நேரடியாக மனிதர்களிடம் எவ்வாறு பேசுவது என்பதை மறந்து கொண்டே வருகின்றோம் . நம்முடைய பேச்சுத்திறமை நன்றாக இருந்தால் வாழ்க்கையில் நிறைய விடங்களில் அது உறுதுணையாக இருக்கும்.
அந்த வகையில் எவ்வாறு நமது பேச்சு திறமையை வளர்ப்பது என்பது பற்றி சில விடயங்களை சொல்கிறேன்
1. யாரோடு பேசும் போதும் புன்னகையுடன் பேசுங்கள்
2.பேசும் போது அவர்களின் கண்ணை பார்த்து பேசுங்கள்
3. பேசும் போது சிறிய ஒரே வார்த்தையில் கேள்வியோ பதிலோ சொல்லி முடிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்
4. மற்றவர்களின் சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல சாதாரணமாக ஆரம்பத்தில் பேசுங்கள் ஏன் என்றால் எல்லோரும் எல்லா நேரத்திலும் சோகமாகவோ சந்தோசமாகவோ இருக்கக்கூடும்
5.மற்றவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சை மெருகூட்டுவது போல அது பற்றி சில வினவல்களை ஏட்படுத்துங்கள்
இவ்வாறு சில அடிப்படை விடயங்களை கருத்தில் கொண்டு மற்றவர்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்துங்கள்
No comments:
Post a Comment