2018ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தேறிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்ப கால வரையறை எதிர்வரும் 8ம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதென பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்ப முடிவுத்திகதி ஏற்கனவே ஜனவாரி 31ம் திகதி என தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் யாவும் இம்முறை இணையம் (Online) மூலமே பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment