Breaking

Thursday, April 16, 2020

அச்சுறுத்தல் தொடரும் நிலையில் தீர்மானம் பெறப்பட்டது எவ்வாறு?


அடுத்த சில வாரங்கள் வரை கொரோனா வைரஸ் ஆபத்து நீங்காது என்று சுகாதாரத் துறை தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், மே 11 அன்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக வினவி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  உயர்கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

உலகெங்கிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த தொற்றுநோய் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கையை விடுத்து வருகிறது. எனினும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானம் எதன்அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என ஒன்றியம் வினவியுள்ளது.


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடித்த்தில் 'நிலமை ஆபத்துக்குரியதல்ல' என்றிருப்பின் அது தொடர்பாக விளக்கமளிக்குமாறும் அக்கடிதத்தில் வேண்டப்பட்டுள்ளது.

இவ்வாறான கடிதமொன்றை நேற்று அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றியம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விற்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment