Breaking

Saturday, October 12, 2019

திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் 21 ஆம் திகதி ஆரம்பம்

 
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான அறிவித்தலை பல்கலைக்கழக இணையத்தளத்தில் பதிவிட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கும் அதிக காலம் இடம்பெற்ற பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை பகிஷ்கரிப்புப் போராட்டம் நேற்றுக் கைவிடப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக நடடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment