Breaking

Saturday, July 13, 2019

கல்வித்துறையின் தரஉறுதிக்கான தனியான நிறுவனம் ஸ்தாபிக்கப்படும்


கல்வித்துறையின் தர உறுதிக்காக செயற்படும் தனியான முழு நேர நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நாட்டின் கல்வித் துறையின் பண்புத் தர உறுதி (Quality assurance) மற்றும் ஏற்றுக்கொள்ளல் (accredited) செயன்முறைகளை பாதுகாக்கும் பொருட்டு இலங்கை கல்வி ஆய்வுச் சேவை என்ற பெயரில் சுயாதீன நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கல்வி அமைச்சரின் பரிந்துரை மற்றும் அமைச்சரவை அனுமதி ஆகியவற்றின் அடிப்படையில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவர். இது விண்ணப்பம் மற்றும் நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் இடம்பெறும்.

பாடசாலைகள் அனைத்தும் பரீட்சிக்ப்பட்டு அவற்றில் தரவிருத்தி இடம்பெற வேண்டிய பாடசாலைகளை இனங்கண்டு வழிாட்டல், மற்றும் ஏனைய கல்வி சார் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து அவற்றை மதிப்பீட்டுக்குட்படுத்தி தரவிருத்திக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் என்பன இந்நிலையத்தின் சிறப்புப் பணியாக அமையும்.

No comments:

Post a Comment