Breaking

Saturday, July 13, 2019

48 MP சுழலும் மூன்று கமெராக்களுடன் Samsung Galaxy A80


Samsung Sri Lanka தமது புதிய Galaxy A80 இனை அறிமுகப்படுத்தி வைத்தது. 48 மெகாபிக்சல்களுடன் உலகின் முதலாவது சுழலும் மூன்று கமெராக்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோனாக இது விளங்குகிறது. நேரடித் தன்மையினை பெரிதும் விரும்புவோரைக் கொண்ட இக்காலத்திற்கு (Era of Live) ஏற்றதாக இந்த smartphone விளங்குகிறது. லைவ் தன்மையின் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள அல்லது ஈடுபடுவதற்கு ஏற்றவாறு இந்த smartphone வடிவமைக்கப்பட்டடுள்ளது. 

உடனடியாக எடுக்கப்படும் படங்கள், லைவ் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்தல், தற்போது நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் நேரடியாக தொடர்பில் இருந்த வண்ணம் பகிரும் அனுபவத்தினையும் இது வழங்குகிறது. நாம் இப்பொழுது ளநடகநை எடுக்கும் காலத்திலிந்து லைவ் இல் இருக்கும் காலத்துக்கு நகருகிறோம். இங்கு மக்கள் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்க்கின்றனர். இந்த புரட்சிகரமான Galaxy A80 ஆனது பல புத்தாக்கங்களை உங்களுக்கு வழங்குpறது: கட்டியிழுக்கும் full-screen display, உடன் Galaxy A80 ஆனது முதலாவது சுழலும் மூன்று கமெராக்கள் மற்றும் intelligent battery இனையும் கொண்டுள்ளது.
“நுகர்வோரை மையப்படுத்தியே நாம் அனைத்தையும் செய்கிறோம். அத்தோடு அவர்களும் அவர்களது குறிப்பிட்ட வாழ்க்கை முறைக்கும் தரத்துக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சாதனங்களைத் தேடுகின்றனர். எமது தேர்ச்சி பெற்ற வல்லுனர்களுடன் உலகளாவிய ரீதியான இயலுமை, வளமான நுகர்வோர் எண்ணங்கள் என்பன Samsung இனரான எம்மை அனைவருக்கும் புத்தாக்கத்தினை வழங்கிடும் ஒரு தனித்துவமான இடத்தில் நிலைபெறச் செய்துள்ளது.” என Samsung Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளரான கெவின் யூ தெரிவித்தார். 
Galaxy A Series ஆனது வேறுபட்ட தெரிவுகளைக் கொண்ட மொடல்களைக் கொண்டுள்ளதனால் ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளுக்கேற்ப சாதனத்தை தெரிவுசெய்து கொள்ள முடியும். Galaxy A80 ஆனது Era of Live க்கு தேவையான பல உன்னத அம்சங்களை வழங்குகிறது.
நீங்கள் காணும் விதத்திலேயே உலகத்தை படம் பிடித்திடுங்கள்
Galaxy A80, சுழலும் மூன்று கமெராக்களைக் கொண்டதனால் உலகை எல்லையற்ற விதத்தில் படம் பிடித்திட உதவுகிறது.
பாவனையாளர் camera app இல் selfie mode இனை தெரிவுசெய்யும் போது மூன்று கமெராக்களும் தன்னியக்கமாக ஃபோனின் பின் பக்கத்தால் வெளியே வந்து சுழலும். இப்புத்தாக்கமிக்க கமெரா தொழில்நுட்பமானது தன்னிகரற்ற அதே மூன்று கமெரா அனுபவத்தினை அதே உயர் தெளிவுடன் வழங்குகிறது. இதன் முன் பக்க மற்றும் பின் பக்க லென்ஸ்கள் உயர் தெளிவினை வழங்குவதால் எடுக்கப்படும் படத்தின் தரத்தில் ஒரு குறையும் இருக்காது.
48MP பிரதான கமெராவுடன் நுகர்வோருக்கு வேறுபட்ட படங்களை தற்போது எடுத்திட முடியும். Galaxy A80 யின் 3D Depth camera ஆனது Live Focus videos இனை வழங்குவதுடன் பொருட்களை, அதன் அளவுகளை தெரிந்துகொள்ள ளஉயn செய்கிறது. Ultra Wide angle lens உடன் தயாரிக்கப்பட்டுள்ளதனால் மனிதரின் பார்வையை ஒத்த காட்சியையும் வழங்குகிறது.
Super Steady video mode ஆனது pro-level action வீடியோக்களை அசைவுகள், சலனங்கள் அற்ற விதத்தில் எடுக்க உதவுகிறது. அத்தோடு மற்றைய intelligent camera வானது Scene Optimizer இனை கொண்டுள்ளது. இது 30 விதமான காட்சிகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அதிலுள்ள குறைபாடுகளை தாமாகவே கண்டறிந்து கிளிக் செய்ய முன் சரிசெய்கிறது. இதனால் நீங்கள் உன்னதமான படங்களை தவறவிடாது அழகாக எடுத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment