Breaking

Thursday, February 28, 2019

சில வெளிநாடுகளின் அதிரடி முடிவு! இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு


பல துறைகள் சார்ந்த தொழிலுக்காக புதிதாக வெளிநாட்டவர்கள் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு மத்திய கிழக்கு நாடுகள் சில தீர்மானித்துள்ளன.
ஐக்கிய அரபு எமீரகம், ஓமான், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
குறித்த துறைகளில் தற்போது வரையில் பணி செய்யும் வெளிநாட்டவர்களில் 40 வயதினை கடந்தவர்களுக்கு பணி நீடிப்பு வழங்காமல் இருக்க அந்நாடுகளின் அரசாங்கம் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய அரபு எமீரகம், ஓமான் மற்றும் சவுதி அரேபியா இதற்கான சட்டங்களை செயற்படுத்தவுள்ளது. குவைத் அரசாங்கம் இது தொடர்பான சட்டங்களை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
தங்கள் நாடுகளின் மக்களின் அறிவை அதிகரித்து தொழில்களை மேம்படுத்த குறித்த நாடுகள் எதிர்பார்த்துள்ளன. அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட 35 துறைகளுக்காக வெளிநாட்டவர்கள் இனிமேல் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு இந்த நாடுகள் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய அரபு எமீரகம், ஓமான், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் அவ்வாறான 35 துறைகளிலும் அதிகமான இலங்கையர்களே பணியாற்றுகின்றனர். புதிய நடைமுறை காரணமாக பெருமளவு இலங்கையர்கள் பாதிப்படையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment