Breaking

Wednesday, February 27, 2019

இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் பங்களிப்பு


தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன் தோன்றிய காலத்திலேயே இந்த தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றது.  ஒலி , தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாக காணப்பட்டது. இதனையடுத்து கல்வெட்டு , ஓலைச்சுவடி , செப்பேடுகள் போன்றவை மூலமாகவும் இயல் இசை வாயிலாகவும் கருத்துக்களை பிறருக்கு மனிதன் வெளிப்படுத்தினான். 

அதன் பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள் , புத்தகங்கள் என்று வளர்ந்தது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தபால்,தந்தி,தொலைபேசி என்று தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்தன. இதன் மூலம் தகவல் தொடர்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் உலகம் என்பது ஒரு பரந்து பட்ட ஒன்றாக காணப்பட்டது. ஆனால் இன்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பதின் செல்வாக்கின் விளைவாக உலகம் இன்று ஒரு சிறு குடும்பம் போல சுருங்கிவிட்டது. ஆரம்ப கால கட்டங்களில் நாட்டு நடப்புக்களை தெரிந்து கொள்வதற்கு செய்திகளையும் பத்திரிகைகளையும் எதிர்பார்த்து நின்றோம் ஆனால் இன்று அந்நிலை மாற்றம் பெற்று நடைபெறும் அனைத்து விடயங்களும் உடனுக்குடன் அந்நொடிகளிலேயே அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது. காரணம் தகவல் தொழிநுட்பத்தின் அபரீத வளர்ச்சி:
மேலும் இத்தகவல் தொடர்பாடல் தொழிநுட்பதின் விளைவாக உலகின் வேகமான சுற்றுகைக்கு ஈடுகொடுக்க மனிதன் பழக்கமடைந்து உள்ளான். அத்தோடு இத் தொழிநுட்பத்தால் காலதாமதம் மற்றும் ஏற்படும் ஏனைய வீண் விரயங்களும் தவிர்க்கப்படுகின்றது.
இத்தகவல் தொழிநுட்பதின் வளர்ச்சியால் மக்கள் மத்தியில் அவர்களது வாழ்க்கை தரம் முதற்கொண்டு அவர்களது வாழ்க்கை முறையும் (Life Style) மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இன்று உலகமே தகவல் தொழிநுட்ப வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறான தகவல் தொடர்பாடல் வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது அதாவது எந்த ஒரு சாதாரண வேலை எடுத்தாலும் Online System. மாணவர்களின் படிப்பு முதல் கொண்டு பெண்களின் அடுப்பங்கரை வேலை வரை இன்று Online System ஆகவே காணப்படுகின்றது.
இவ்வாறான Online மயமாக காணப்படுவதனால் மாணவர்களின் கல்வியில் பாரிய பங்களிப்பு செய்கிறது. அதாவது உலகில் நடக்கும் அனைத்து விடயங்களும் உடனுக்குடன் Update செய்வதானது மாணவர்களின் நுண்ணறிவை வளர்ச்சி அடைய செய்வதுடன் அவர்களை நாளைய உலகின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் முகம் கொடுப்பதற்கும் தயார்படுத்துகின்றது.
இந்த தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மாணவர்களது கல்வியில் மாத்திரமின்றி அனைத்து மனிதரது வாழ்க்கையியலும் பாரிய செல்வாக்கு செலுத்துவதாக உள்ளது. இன்றைய நிலையை பொருத்தமட்டில் சிறு பிள்ளைகளின் கையை கூட இதன் செல்வாக்கு விட்டு வைக்கவில்லை. இன்று பிள்ளைகள் இயற்கையில் விளையாடுவதை காட்டிலும் அதிகமாக தொலைபேசி மற்றும் ஏனைய Video Games விளையாடுவதே அதிகமாக காணப்படுகின்றது.
அதாவது நன்மை எனும் போது Satellite Image பெற்றுக் கொள்ளப்படுகின்கிறது மேலும் CCTV தொழிநுட்ப பயன்பாடு மூலம் ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது. இன்னும் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது.
இவ்வாறன தொடர்பாடல் தொழிநுட்பம் இன்றைய உலகத்தின் மூலப்பொருள் என்பதில் தவறில்லை. இதன் வருகையின் விளைவாக எந்தளவு நன்மைகள் காணப்படுகின்றதோ அதே அளவான பிரதிகூலங்களும் காணப்படுகின்றது.
அதாவது இத் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் விளைவாகவே Hackers வேலைப்பாடுகள் அதிகரித்துள்ளது. இது இன்றைய உலகின் மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக மாற்றமடைந்துள்ளது. மிகவும் அண்மை காலத்தில் அதாவது ஓரிரு வாரங்களுக்கு முன்பாக ATM Hackers  இனங்காணப்படுள்ளனர். மற்றும் இதன் விளைவாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையிலும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றது.
எனவே தான் தற்கால உலகிற்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்பதின் வளர்ச்சி இன்றியமையாத ஒன்றாக காணப்படும் அதேவேளை அதன் Side Effect உம் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆகவே நாம் தான் அதனை பயன்படுத்துவதில் அதிக அவதானம் எடுத்துக்கொண்டு எமது வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவோம்.

No comments:

Post a Comment