Breaking

Wednesday, February 27, 2019

புதிய கற்கை பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நான்கு பல்கலைக்கழங்கள்


ரூபா 26,400  மில்லியன் செலவில் திட்டம் புதிய பல்கலைக்கழகக் கல்வியாண்டிலிருந்து  நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

களனி, சப்ரகமுவ, ரஜரட்ட ஆகிய பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.  

இப்புதிய பீடங்களுக்கு 850 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கென 26,400 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

புதிய கல்வியாண்டில் 31, 600 மாணவர்களை அனுமதிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் 2018ஆம் ஆண்டின் க. பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளுக்கமைய 1,77,907 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார்.  

புதிய பல்கலைக்கழக கல்வியாண்டிற்காக 76,596 பேர் அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.  வழமையை விட பல்கலைக்கழக அனுமதி கோருவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment