Breaking

Tuesday, February 26, 2019

நாடளாவிய ரீதியில் அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு!


ஊதிய பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படாததை எதிர்ப்பு தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.
15 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 15,000க்கும் அதிகமானவர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் இணையவுள்ளதாக, அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவின் செயலாளர் உதயசிறி தெரிவித்துள்ளார்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்துக்கு வரமுடியாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment