5G என அழைக்கப்படுகின்ற மொபைல் தொழில்நுட்பத்தின் ஐந்தாவது தலைமுறை, எமது வாழ்வில் பல புதிய புத்தாக்கங்களைக் கொண்டு வரவுள்ளது. சாரதியின்றி இயங்கும் கார் முதல், ஹோலோகிராபிக் (holographic) அழைப்புக்கள் வரை இதன் கட்டமைப்புக்கள் தொழிற்படுகின்ற தரவு இணைப்புக்களை 5G வழங்கும்.
வலையமைப்பு தொழில்நுட்பத்தில் முன்னைய புத்தாக்கங்களைப் போலன்றி, 5G இற்கு அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு சீன நிறுவனமான Huawei எதிர்பாராத விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், வலையமைப்பு பாதுகாப்பு தொடர்பான சட்டரீதியான சவால்களுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
ஆனால் உண்மையான அச்சுறுத்தல் Huawei அல்ல, அதன் அரசியலே. சர்வதேச சந்தை புத்தாக்கத்தை முன்னர் போற்றியிருந்த நிலையில், குறுகிய மற்றும் சித்தப்பிரமை கொண்ட தேசியவாதம் காணமாக சில நாடுகள் அதனை தற்போது வேறு கோணத்தில் உற்றுநோக்குவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இந்த அணுகுமுறையானது இதனுடன் தொடர்புடைய நாடுகளை காயப்படுத்தும். சந்தையொன்றிலிருந்து தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களை அகற்றுவது என்பது அச்ந்தையில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை அடையப்பெறும் வாய்ப்பினை தட்டிப்பறித்து, கிடைப்பவற்றில் மிகச் சிறந்தவற்றை தெரிவு செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுவர். பெரும்பாலும் தரங்குறைந்த சேவையை அதிக விலை கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.
இவை அனைத்திற்கும் மேலாக, தனிப்பட்ட நிறுவனங்களை உள்நுழைய விடாது முட்டுக்கட்டை போடுவது பாதுகாப்பினை எவ்விதத்தாலும் மேம்படுத்த எதவாது. Huawei நிறுவனத்தை முடக்குவதால் அரசியல்வாதிகளுக்கு சமூக ஊடகங்களில் பிரபல்யத்தை தேடிக்கொள்ள உதவியாக அமையக்கூடும், ஆனாலும், பாதுகாப்பான தொலைதொடர்பாடல்கள் வலையமைப்புக்களுக்கும் அது எவ்விதத்திலும் பயன்படாது. பூகோள வழங்கல் சங்கிலியில் ஆபத்துக்கள் என்பது உலகில் எந்த இடத்தில் இருந்தும் எந்த தொழில்நுட்ப வழங்கல் நிறுவனத்தையும் ஸ்தம்பிக்கச் செய்ய முடியும். ´இலச்சினையால் இணைய பாதுகாப்பு´ (cyber security by logo) என சில சமயங்களில் ஏமாற்றப்பட்டு, தனிப்பட்ட நிறுவனங்களை முடக்குவது என்பது அரசியல்வாதிகளின் ஆலோசனைக்குட்பட்ட அணுகுமுறையாக காணப்படுவதுடன், ஏனையவர்கள் உணர்வுரீதியாக அதற்கு ஆட்கொள்ளப்படுகின்றனர். எந்தவொரு நிறுவனத்தினதும் தலைமை அலுவலகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது என்ற உண்மைக்கு அப்பால், அனைத்து விற்பனையாளர்களுக்கும் சோதனை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற ஒரு கடுமையான நிகழ்ச்சித்திட்டத்தை உண்மையான பாதுகாப்பு வல்லுனர்கள் முன்வைத்துள்ளனர்.
Huawei ஒரு சீன நிறுவனம் ஆகையால் அதனை நம்ப முடியாது என Huawei எதிர்ப்பாளர்கள் கூறுவதுடன், அமெரிக்கா பிரயோகிக்கும் அழுத்தத்தின் காரணமாக சில நாடுகள் தமது வலையமைப்புக்களில் Huawei உபகரணத்தைக் கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு விளைவுகள் தொடர்பில் கருத்தில் எடுத்துள்ளன.
சில அரசாங்கங்கள் இந்த அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளன. குறிப்பாக தனது பாதுகாப்பின் உத்தரவாதத்திற்கு அமெரிக்க இராணுவ உதவியில் தங்கியுள்ள போலந்து போன்ற நாடுகள் இதற்கு முற்றாக அடிபணிந்துள்ளன. எனினும் ஏனைய பல நாடுகள் Huawei இன் தொழில்நுட்பமானது பணத்திற்கான உண்மையான பெறுமதியைக் கொண்டுள்ளதுடன், எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அற்றது எனத் தீர்மானித்துள்ளன.
கம்பியில்லா தொழில்நுட்பத்தின் தற்போதைய தலைமுறையான 4G தொடர்பில் Huawei இன் வர்த்தகத்தைக் கருதுகையில், நாம் 170 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 4G உபகரணத்தை விநியோகித்துள்ளதுடன், 500 தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கு அண்ணளவாக 1,500 வலையமைப்புக்களையும் கட்டமைப்புச் செய்துள்ளோம். Fortune 500 பட்டியலிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் நாம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்காது இத்தகைய ஒரு தொழிற்பாட்டு வரலாற்றை எம்மால் ஒரு போதும் நிலைநாட்டியிருக்க முடியாது.
எம்மை நம்ப முடியாது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். தொலைதொடர்பாடல் வலையமைப்புக்களை உண்மையாக கட்டமைத்து, இயக்குகின்ற நிறுவனங்களை விடவும் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அமெரிக்க அரசியல்வாதிகள் பலரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்ற வகையில் இதனை நம்புவதற்கு கடினமாக உள்ளது அல்லவா? 5G தொடர்பான நிலைப்பாடு என்ன? 5G தராதர நடைமுறைகள் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், 50 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் 30 இற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 30,000 இற்கும் மேற்பட்ட 5பு தள மையங்களை (base station) ஏற்றுமதி செய்துள்ளோம். 5G chip வலுவூட்டப்பட்ட ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டில் நாம் அறிமுகப்படுத்தவுள்ளோம். இந்த வாடிக்கையாளர்கள் எம்மீது நம்பிக்கை கொண்டிரா விட்டால், Huawei இடமிருந்து 5G சாதனத்தை கொள்வனவு செய்திருக்க மாட்டார்கள்.
அவ்வாறெனில், சில பூகோளவியல் சந்தைகளில் 5G வலையமைப்புக்களில் பங்கெடுத்துக் கொள்வதிலிருந்து Huawei ஏன் விலக்கி வைக்கப்பட்டுள்ளது? பதிலைத் தேடினால் தொழில்நுட்பம் சார்ந்த அக்கறைகளை விடவும், சர்வதேச அரசியல் தொடர்புபட்டதாகவே இது காணப்படுகின்றது. டிஜிட்டல் கட்டமைப்புக்கள் போகப் போக மிகவும் நெருக்கமான இணைப்பைக் கொண்டவையாக மாறி வருகின்ற நிலையில் உலக ஆபத்துக்கள் அரசியல் நம்பிக்கையீனங்களால் பிளவுபட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்: இணைய பாதுகாப்பு என்பது முக்கியமற்றது என்று Huawei ஒரு போதும் கூறவில்லை. நிச்சயமாக அது முக்கியமானது. ஆனாலும் இது சிக்கலான ஒரு விடயமாக உள்ளதுடன், இணைய ஆபத்துக்களை திறன்மிக்க வழியில் நிர்வகிக்கும் வாய்ப்பினைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் அதற்கு அதிநவீன வழிமுறையில் தீர்வு காண வேண்டும்.
5G என்பது வெறுமனே உங்களுடைய ஸ்மார்ட்போனுக்கான வேகமான இணைய இணைப்பு மட்டுமல்ல. நாளைய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான அத்திவாரமாக அது காணப்படுவதுடன், வங்கிகள், வைத்தியசாலைகள், விமானப் போக்குவரத்து மற்றும் நகரங்களை நிர்வகித்தல் என அனைத்தையும் அது வலுவூட்டவுள்ளது. நாளைய சிக்கல்மிக்க டிஜிட்டல் உட்கட்டமைப்புக்களுக்கு 5G உதவும் எனில், அந்த கட்டமைப்புக்களை பாதுகாப்பானதாக மாற்றியமைத்தல் வேண்டும்.
உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள், ஒழுக்காற்றுனர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்பின் மூலமாக மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும். இணைய பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யாரும் இந்த உண்மையை மறுக்க முடியாது. இவை அனைத்திற்கும் அப்பால் தனது வலையமைப்பு உபகரணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றியமைப்பதற்கு பல மில்லியன் டொலர் தொகையை Huawei செலவிட்டுள்ளது.
5G இன் வாய்ப்புக்களை முழுமையாக அடையப் பெறுவதற்கு மிகச் சிறந்த தீர்வுகளை வழங்குகின்ற நிறுவனங்கள் சந்தையில் வெகுமதியீட்டுவதற்கு கொள்கை வகுப்பாளர்கள் இடமளித்தல் வேண்டும். இணையப் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். எனினும் உண்மையான விபரங்களை பகிர்ந்து, தொழில்நுட்பம் தொடர்பான உண்மையான பிரச்சனைகளை ஆராய வேண்டும். அரசியலை அரசியல்வாதிகளின் கைகளில் விட்டு விடுவோம். அவ்வாறு இல்லையெனில், உலகமே 5G எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சில நாடுகள் பின்தள்ளப்படக்கூடும்
No comments:
Post a Comment