Breaking

Thursday, January 17, 2019

மாணவர்களின் கல்வி விருத்தி பாதையில் முன்பள்ளிப்பருவ பாடசாலையின் முக்கியத்துவம்.


ஒரு சமூகத்தின் முன்னேற்றம், சமூக நகர்வு, சமூகவளர்ச்சி, அபிவிருத்தி போன்ற விடயங்களுக்குபொதுவாகவும் அடிப்படையாகவும் விளங்குவது கல்வியாகும். கல்வியானது ஒரு குழந்தையினுடைய வாழ்வில் அதிமுக்கியம் வாய்ந்த ஒரு விடயமாகும்

குழந்தையானது தாயினுடைய கருவறையில் இருக்கும் போதே கற்றுவிடுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அந்தவகையில் மாணவர்களின் கல்வி பாதையில் முதப்பருவமான முன்பள்ளிப்பருவத்தினுடைய அவசியத்தினை யாவரும் அறிந்திருப்பது பயனுடையது. முன்பள்ளிப் பருவ பாடசாலைஎன்பது பாலர் பாடசாலை எனும் நிறுவனம் அல்லது பிள்ளை முறைசார் பாடசாலைக்கு செல்ல முன்பு அதற்கானதேர்ச்சிகளை பெறும் நிறுவனம் என வரையறுக்கப்படும் .

முறைசார் பாடசாலைக்கு செல்வதற்கான பயிற்சிகளை வழங்காவிடினும். வயதுக்கேற்ப வாழ்க்கைதேர்ச்சிகளைப்பெறும் இடமாக முன்பள்ளி பாடசாலை விளங்குகின்றது. முறைசார் கல்வியை பெறுவதற்கான உள ஆயத்தநிலைக்குரிய வயதெல்லையாக 2  வருடம் முதல் 5 வருடம் வரையான வயதெல்லையாகும் இவ் வயதெல்லையே முன்பள்ளிப்பருவ வயதெல்லையை குறிப்பிடுகின்றது. முன்பள்ளிப்பருவ கல்வி தொடர்பான எண்ணக்கரு 20ம் நூற்றாண்டில் வலுப்பெற்றது. எனினும் அதற்கு முற்பட்ட காலத்தில் ' நர்ஸ்ரி '' ( ரேசளநசல ) எனும் பாலர்பாடசாலை பிரபல்யம் அடைந்திருந்தது. முன்பள்ளிப்பருவ பாடசாலை எவ்வளவு தூரம் பிள்ளைளின் கல்விவிருத்திக்கு அவசியமானது என்பதை பிளேட்டோ கூறுகையில் ' அறிவிலிகளான பெற்றோர்களின் பொறுப்பிலிருப்பதனை விட அறிவார்ந்த ஆசிரியர் வழிகாட்டலின் கீழ் பிள்ளை உயர் குணங்களைக் கொண்ட ஆளுமையினால் பெற முடியும் ' எனக்கூறுகின்றார். பிள்யையின் கல்வி விருத்தியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக பங்கு உள்ளது என வலியுறுத்துகின்றார். பிளேட்டுவின் கருத்தினை கொமேனியால் அவர்களும் வலியுறுத்துகின்றார். பிள்ளைகளுக்கு ஆறு வயது நிரம்பும் வரை முறைசார்ந்த முழுமையான கல்வி வழங்கப்பட வேண்டுமென கூறுகிறான். குழந்தைப்பருவமானது பிள்ளையின் விருத்தியில் மிகவும் முக்கியமான
பருவம் எனவும் பிள்ளையின் முழுவளர்ச்சியிலும் இப்பருவம் தாக்கம் செலுத்துகின்றது எனவும் ருஸோ. தனது நூலான எமிலியில் பிள்ளை வளர்ப்பு பற்றிய காத்திரமான கருத்துக்களை வலியுறுத்துகின்றார்.

பிளேட்டோ, ருஸோ போன்றோர் முன்பள்ளிக்கல்வி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டாலும் புரொடல் முதலாவது ' கிர்டாகார்டன் ' பாலர்பாடசாலையினை 1837இல் ஜேர்மனியில் நிறுவி எவ்வாறு பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும் எதற்கு அதிகமுக்கியம் வழங்குதல் அவசியம் என தாதுவாரத் அடிப்படையில் ஏற்படுத்தியமைத்தார். பாலர் பாடசாலைகளுக்கான ஒரு கல்வித்தத்துவத்தினையும் கவனமாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களையும் திட்டமிட்ட செயற்பாடுகளையும் முன்பள்ளிக்கல்வி தொடர்பாக முன்வைத்தார், புரொபல் இவரது பாலர்பாடசாலை மாதிரியினது பெரிதும் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தினை ஈர்ந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா முழுவதுமாக பரவியது.

இலங்கையினை பொறுத்தவரையில் 1998 ம் ஆண்டில் முதல் நடைமுறையில் வந்தது. இவ்வாறான அடிப்படையில் தோற்றம் பெற்ற முன்பள்ளி பாடசாலை பற்றிய எண்ணக்கருவானது பிள்ளைகளின் விருத்தியினை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. முன்பள்ளிபாடசாலையில் பிள்ளைகள் சமூகவிருத்தி, உளவிருத்தி, நுன்மதிவிருத்தி, உடல்உள நடத்தை விருத்தி, பண்பாட்டு விருத்தி, பாதுகாப்பு தொடர்பான விருத்தி என பல்வேறுவிருத்திகளை பெறுகின்றார்

பொ.சர்ஸ்னி
கிழக்கு பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment