தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளன.
நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள் வௌியாகும் என கல்வி அமைச்சு ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது.
விண்ணப்பங்கள் வௌியாக முன்னர் பின்வரும் சில அம்சங்களை உங்கள் அவதானத்திற்கு கொண்டுவருகிறோம்.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இரு தொகுதி மாணவர்கள் இம்முறை உள்ளீர்க்கப்படவுள்ளனர். இதன் படி சுமார் 8000 பேர் இவ்வாறு உள்வாங்கப்படுவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடங்களைப் போன்று பிரதேச பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி 2019.02.15 ஆகும்
விண்ணப்பதாரிகளின் வயது எல்லை 2019.01.01 அன்று 25 வயதுக்கு மேற்படாதிருக்க வேண்டும். எனினும் சமயப் பாடங்களுக்கான விண்ணப்பதாரிகள் மதகுருமார்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள் மதகுருமார்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள் வயதெல்லை 30 க்கு மேற்படாதிருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment