Breaking

Sunday, January 20, 2019

கல்வியியல் கல்லூரிகளுக்கு இவ்வருடம் 8000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்


கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படுமென்று ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். 
2016 தொடக்கம் 2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இம்முறை ஒரேமுறையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
மே மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். ஆகக்கூடுதலானோர் ஆரம்ப கற்கை நெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம், கணிதம் ஆகிய கற்கைநெறிகளுக்காக கூடுதலானோர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.கல்வியியல் கல்லூரிகளுக்கு ஒரே முறையில் பெரும் எண்ணிக்கையானோர் இணைத்துக் கொள்ளப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment