Breaking

Wednesday, August 28, 2019

தேசிய கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு


தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் செப்படம்பர் மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு தொடர்பான பிரதான தேசிய வைபவம் இம்முறை நில்வலா தேசிய கல்வியியல் கல்லூரியில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு செப்டம்பர் 16 ஆம் திகதி இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

எனவே, உள்ளீர்ப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக்கடிதங்கள் எதிர்வரும் செப்படம்பர் முதலாம் வாரம் முதல் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இம்முறை 2017 மற்றும் 2018 ஆகிய இரு வருடங்களைச் சேர்ந்த சுமார் 8000 பேர் உள்ளீர்ப்புச் செய்யப்படவுள்ளதால் இச்செயன்முறைகள் சற்று தாமதமடைந்துள்ளதாகவும் அனைத்துக் கல்லூரிகளுக்கானமான உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment